பட்டு உடைகள் அணிவதற்கு இது தான் காரணமா ?
பட்டு உடைகள் அணிவதற்கு இது தான் காரணமா?
நம்முடைய பாரம்பரியத்தில் உடைகளுக்கும், நிறங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். எந்தெந்த வகையான உடைகளை எந்த மாதிரியான வைபவங்களின் போது அணிய வேண்டும், அந்த உடையும் கூட எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சில வரைமுறை வகுத்து வைத்துள்ளார்கள். இவற்றிற்கு என்ன காரணம் என பலருக்கும் தெரியாது.
ஆடம்பர பொருளாக நினைத்து அனைவரும் பட்டு ஆடைகள் என்ன காரணத்திற்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது? அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது பட்டு தான் அணிய வேண்டும் என சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது.
நம்முடைய பாரம்பரிய முறையில் பட்டிற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கோவிலில் தெய்வங்களுக்கு பட்டு துணிகள் மட்டும் தான் அணிவிப்பார்கள். அதே போல் திருமணம் என்றே அங்கு முதலிடம் பிடிப்பது பட்டும், தங்கமும் தான். திருமணத்தின் போது மணமக்கள் மட்டுமின்றி, திருமணத்தில் கலந்து கொள்ள செல்வபவர்களும் பட்டு ஆடைகள் உடுத்திச் செல்வது தான் நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதே போல் கோவிலுக்கு செல்லும் போதும், எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் பட்டு உடுத்துவது வழக்கம்.
United Kingdom,Germany,France,Italy,Netherlands ஆகிய நாடுகளுக்கு sinegam.com இன் ஊடக மலிவான விலையில் பட்டாடை விநியோகம் பற்றி அறிய எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
https://www.sinegam.com/contact-us.