Share

இலங்கையின் வர்த்தக தலைநகரமான கொழும்பு?


இலங்கையின் வர்த்தக தலைநகரமான கொழும்பு.

Aravandy Pillai Jayarajah அவர்களின் கற்றுறை.

கொழும்பு இலங்கையின் வணிக தலைநகரமும் , இலங்கையின் ஆகப்பெரிய நகரமும்ஆகும். மக்கள்தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரிய நகரம்.

இது இலங்கையின் நிதி , வர்த்தக மற்றும் சுற்றுலா தலமாகும்.

நிரந்தரமாக வசிக்கும் மக்கள் தொகை ஏறக்குறைய 6 லட்சம் . பரப்பளவு 37 சது.கிமீ.

கொழும்பின் நீண்ட தூரமானது, வடக்கிலிருந்து தெற்கிற்கே. இது மட்டக்குளிய இருந்து வெள்ளவத்தை வரை. இதன் தூரம் 17 கி.மீ.

இலங்கையின் உத்தியோகபூர்வ தலைநகரம் அருகிலுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே ஆகும்.

கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகும். இது 15 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, கொழும்பு 1 அல்லது கோட்டை பகுதி நகரத்தின் மையமாக உள்ளது. பௌத்தர்கள் , முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மக்களும் வசிக்கும் இடங்களில்மிகவும் முக்கியமானது கொழும்பு.

கொழும்பில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரமானது எனது அபிப்பிராயப்படி சிறுபான்மையினரிடமே கூடுதலாக உள்ளது

அநேகமாக 75% வீதமானவர்கள் ஆங்கிலம்புரிந்து கொள்வார்கள் ( எனது அபிப்பிராயம்).
ஓரளவு சுத்தமான தெருக்கள்.

பெரிய , சகல வசதிகளையும் அரசாங்க பாடசாலைகள் நிறைய உள்ளன.

இலங்கையில் மாணவர்கள் 6 வயதிலேயே கல்லூரிக்கு (College)செல்வார்கள். ஆம், பாடசாலைகள் கல்லூரி என்று அழைக்கப்படும். பட்டப்படிப்பு பல்கலைகழகத்தால் வழங்கப்படும். (Univercity)

ஆங்கிலத்தில் Colombo , ‘கலம்போ’ சிங்களத்தில் ‘கொலம்ப’ என்று அழைக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள சில முக்கியமான இடங்கள் துறைமுகம் , காலி முகத்திடல், விஹாரமஹாதேவி பூங்கா , பேரை ஏரி, கொழும்பு ரேஸ்கோர்ஸ், ( குதிரை ஓடுவதில்லை இப்போது) , கோள் மண்டலம், கொழும்பு பல்கலைக்கழகம், கல்கிஸ்ஸ கடற்கரை, BMICH மகாநாட்டு மண்டபம் , சுதந்திர சதுக்கம் , புதிய ,பழைய நகர மண்டபங்கள் , தெஹிவளை மிருக காட்சி சாலை, தாமரைத்தடாகம் அரங்கம், கொழும்பு தாமரை கோபுரம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஆகியவை அடங்கும்.

பேரை ஏரியின் அருகிலுள்ள கங்காராமை விகாரையும் குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.

கொழும்பில் இரவு வாழ்க்கை மிகவும் மும்முரமானதுவும் இளைஞர்களால்  ரசிக்கப்படுவதுமாகும் . பல (Pubs)பப்கள், பார்கள், கேசினோக்கள், நடனங்கள், ஸ்பாக்கள் மற்றும் பல உள்ளன. பைசாவும் நிறைய செலவாகும்.

மேலும் கொழும்பில் உடற்பயிற்சிக்காக பல நடை பாதைகள் உள்ளன. ரக்பி, கிரிக்கெட், கால்பந்து மற்றும் கொல்ப் , ஏன் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் பல மைதானங்கள் உள்ளன. பல நீச்சல் குளங்கள்உள்ளன. விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பல சமூக கிளப்புகள் உள்ளன.

சுகாதாரம்

கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையை இலங்கையின் மிகச் சிறந்த ஒரு மருத்துவமனையாக கொள்ளலாம். அங்கே அனைத்து பெரிய , சிறிய அறுவை சிகிச்சைகளையும் இலவசமாகச் செய்கிறார்கள். பக்கத்திலேயே கண்மருத்துவமனை உள்ளது . இலங்கையில் அரசு மருத்துவமனைகள் மிகவும்சுத்தமாகவும் திறமையாகவும் உள்ளன. அவர்கள் நோயாளிகளுக்கு நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். படுக்கைகளின் பற்றாக்குறை இருக்கலாம், ஆனால்தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இலங்கை அரசாங்க மருத்துவமனைகள் மிகவும் சிறந்தவை என்பது என் கருத்து. நிறைய தனியார்மருத்துவமனைகளும் உண்டு.

Aravandy Pillai Jayarajah