Share

Tik Tok டிக் டொக் செயலிக்கு சிலர் அடிமை


டிக் டொக் செயலிக்கு சிலர் அடிமையாகி அதிலேயே இருப்பது ஏன்?

டிக் டொக் 2018 ல் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் . இதில் 16 தொடக்கம் 24 வரை வயதுடையவர்களே அதிகம் மூழ்கி இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. சீன நிறுவனமான byte dance எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இச்செயலி சீனாவில் கிடைக்காது. பொதுவாக போதை பொருள் விற்பனை செய்பவர் தன் வீட்டில் தன் பிள்ளைகளுக்கு அதனை பழக்க மாட்டாரே?

பொதுவாக மனிதர்களிடம் பணம் , புகழ் சம்பாதிக்கும் போதை இருந்து கொண்டே இருக்கும். இதற்கான ஓர் களமாகவே இன்றைய இளைஞர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். தாம் விரும்பும் சினிமா நடிகை / நடிகன் போன்று தம்மாலும் முடியும் என்பதை தன் நட்பு வட்டாரம் அல்லது குடும்ப அங்கத்தவர்கள் இன்னும் உலகுக்கே கொண்டு செல்லலாம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இதில் மூழ்கி இருக்க காரணமாக அமையலாம்.

எனினும் இதில் உள்ள விபரீதம் என்னவெனில் 15 செகண்ட் தானே என்று சொல்லி இதில் 15*4=60 (1நிமிடம்) என ஒருவர் ஒரு நாளைக்கு 240 வீடியோ பார்த்தால் 1 மணி நேர விரயம் கொஞ்ச கொஞ்சமாக பார்ப்பதால் இதை யாரும் உணரப்போவதில்லை.

இதில்  தோன்றும் காணொளியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ஆபாச விமர்சனங்களை பதிவிடும் குழுக்கள் இயங்கி வருகின்றன,