Share

இலங்கையில் மலை குகைகள்,நீர்வீழ்ச்சிகள்


ஒரு குட்டி தீவிக்குள் எத்தனை அதிசயம் & ஆச்சரியம்.கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியபின் கண்டிக்கு ஸ்பெசல் புகையிரத வண்டி உள்ளது. அதில் பிரயாணிப்பது ஒரு அலாதி சுகம்.மூன்று பக்கம் திறந்த வண்டி.

கண்டியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இளம் மிதமான குளிர் மேலை தழுவி செல்லும். மலை நாடுகள் இயற்கையின் செல்வஙகள். உயர உயர போக போக குளிடே போகும்.அதிக பட்சம் சாதாரண நாட்களில் நுவரெலியாவில் 6°C வரை குறையும். அழகிய நீர் வீழ்சிகள், அழகிய தேயிலை,ரப்பர்,கொக்கோ,

மிளகு தோட்டங்கள். கண்டி பேராதெனியா,நுவரெலியா ஹக்களை பூந்தோட்டம் மிக சிறப்பானவை.

கண்டி புத்தரின் தந்த கோவில்,தளதா மாளிகை, சீதா அம்மன் கோயில்,ஹனுமான் கோவில்,கதிர்காமம் என்று பார்க்க வேண்டிய இடஙகள் பல உள்ளன.கண்டி பதுளை ரயில் பிரயாணம் வெகுவாக ரசிக்க கூடியவை. நிறையவே மலை குகைகள்,நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பார்த்து பார்த்து ரசிக்க கூடியவை நிறையவே உள்ளன.தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது, சுத்தம் சுகாதாரம் மிகவும் மேல்.