Share

கிளிநொச்சி "கறுக்காய்த் தீவு"


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள "கறுக்காய்த் தீவு" என்ற ஊருக்கு எப்படி பெயர் வந்தது?

காலத்துக்கு காலம் நிர்வாக மாவட்ட எல்லைகள் மாறும்போது ,முதலில் யாழ்ப்பாண மாவட்டதின் அறியப்படட இக் கிராமம், பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உள்பட்டது. எனினும் 1984 ம் ஆண்டு யாழ். மாவடடத்தை இரண்டாக பிரித்து கிளிநொச்சி மாவடடத்தை உருவாக்கியபோது அது அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் யாழ் .கடல்நீரேரியின் கிழக்கு பகுதியில் கறுக்காய் மரம்கள் கொண்ட தீவாக,கடல் சூழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாம். நிச்சயமாக இது ஒரு காரணப்பெயர்தான். தற்போதும் இப்பகுதியின் இரு புறம்களிலும் கடல் சூழ்ந்த பகுதியாக உள்ளது.மேலும் ஓர் செய்தி சர்வதேச நாடுகளில் விற்பனையாகும் " பூநகரி மொடடைகருப்பன் " அரிசி பெருமளவில் இங்கும் சாகுபடி செய்யப்படுகின்றது.நன்றி.