Share

தாய்நாட்டை தவிர்த்து வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள்


தாய்நாட்டை தவிர்த்து வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள்.

"நாட்டினால் வரும் இடர் (Country Risk)" பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

உதாரணத்துடன் ஆரம்பிப்போம்.

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே அவரது சம்பாத்தியம் அனைத்தையும் இலங்கையிலேயே முதலீடு செய்திருந்தால் தற்போது என்ன ஆகி இருக்கும்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஒரு வேளை அவரது மொத்த முதலீட்டையும் தாய் நாட்டிலேயே வைத்திருந்தால் இப்போது அதன் மதிப்பு என்ன?

இதுதான் "நாட்டினால் வரும் இடர்" (Country Risk).

ஒரு நாடு வீழ்ச்சி அடையும்போது, நாட்டுடன் சேர்ந்து அதில் நீங்கள் செய்திருக்கும் முதலீடும் வீழும்.

பொதுவாக அரசியல், பொருளாதாரம், யுத்தம் அல்லது இயற்கை அழிவினால் ஒரு நாடு வீழ்ச்சி அடையலாம்.

அரசியல் உதாரணம் : ஐரோப்பிய யூனியனை விட்டு விலகுவதாக இங்கிலாந்து எடுத்த முடிவு.

பொருளாதார உதாரணம்: பாகிஸ்தான், இலங்கை

யுத்தம் : ரஷ்யா, உக்ரைன்

இயற்கை அழிவு : துருக்கி

தாய் நாட்டுக்கு வெளியே இந்நாட்டு மக்கள் சேமித்து வைத்திருந்தால் அவர்கள் பணத்திற்கு இப்போது எந்த பாதிப்பும் வந்திருக்காது.

இந்தியர்கள் இந்த இடர்பாட்டை சரியான வகையில் எதிர்நோக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு உன்னத திட்டத்தையே அறிவித்திருக்கிறது.

Liberalized remittance scheme of RBI என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு கோடியே 83 லட்சம் ரூபாயை அயல்நாடுகளில் முதலீடு செய்யலாம்.

அதுவும் ஒவ்வொரு வருடமும்!

வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் பேரிலும்!!

வட நாட்டில் உள்ள ஒவ்வொரு கோடீஸ்வரனும் அயல்நாடுகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.

வங்கிகளில் மட்டுமல்ல, மாளிகைகளில், வணிக வளாகங்களில், பங்கு சந்தைகளில்…

ஸ்டாலின், அண்ணாமலை எல்லாம் இப்பொழுது தான் வெளிநாட்டு சுற்றுலா சென்று வந்து கொண்டிருக்கிறார்கள் .

ஜெயலலிதா, தினகரன், சசிகலா ஆகியோர் 25 வருடங்களுக்கு முன்பே சட்டத்துக்கு உட்பட்டும், கட்டத்துக்கு வெளியேயும் வெளிநாடு முதலீடுகளை செய்து விசாரணைக்கும் உள்ளானவர்கள்.

எங்கள் பக்கத்தில் பெரியகுளம், நத்தம் கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட அயல்நாடுகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

இந்திய கோடீஸ்வரர்கள் தாய் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுவதும் அதிகரித்து வருகிறது.

கடந்த எட்டு வருடங்களில் 7500 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். (நிரவ் மோடி, லலித் மோடி தவிர்த்து)

10 லட்சம் இந்தியர்கள், இந்திய குடியுரிமையை உதறி விட்டு நிரந்தரமாக வெளியேறி விட்டார்கள்.

அடுத்த வருடம் இன்னும் அமர்க்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.