பட்டாடை, மற்றும் நவீன ஆடை வகைகள்
India, Sri lanka, Canada United, Kingdom,Germany,France,Italy,Netherlands ஆகிய நாடுகளுக்கு sinegam.com இன் ஊடக மலிவான விலையில் பட்டாடை, மற்றும் நவீன ஆடை வகைகள் விநியோகம் பற்றி அறிய எம்மை தொடர்பு கொள்ளுங்கள். https://www.sinegam.com/contact-us
பெண்களின் நவீன ஆடை வகைகள்
பெண்களுக்கான ஆடை வகைகள் பல உள்ளன. அவற்றில் சில வகைகளை தற்காலத்திற்கு ஏற்றாற் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.
புடவை- தமிழரின் பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் தமிழ் பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.