பெண்கள் ஏன் ஆபரணங்கள் அணிய வேண்டும் தெரியுமா
பெண்கள் ஏன் ஆபரணங்கள் அணிய வேண்டும் தெரியுமா? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நமது முன்னோர்கள் நமக்கு கூறிய பல கருத்துக்களை நாம் தற்போது மூட நம்பிக்கை என்று உதாசினப்படுத்துவது உண்டு.
ஆனால் நமது முன்னோர்கள் பின்பற்றிய பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் பல அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருக்கும். அதுவும் குறிப்பாக நமது உடல் நலத்திற்கு நன்மை தர கூடிய பல விஷயங்களை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். அந்த வகையில், பெண்கள் நகை அணிவதில் இருந்து அவர்கள் அணியும் உடை வரை எல்லாவற்றிக்கும் அறிவியல் சார்ந்த காரணங்கள் உண்டு..
இயல்பாகவே பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனமுடன் இருப்பது உண்டு. அதற்காகவே பெண்கள் பலர், நகைகளை அணிவது உண்டு. அந்த வகையில், பெண்களின் ஆபரணங்கள் அறிவியலோடு தொடர்பு கொண்டவை என்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்.. ஆம், பொட்டு, வளையல், கால் கொலுசு என்பது அழகுக்காக அல்ல. ஆரோக்கியத்துக்காக தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் பெண்கள் இவையெல்லாம் ஃபேஷனாகவே ஃபாலோ செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இவை எல்லாம் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவை.
குங்குமம்:
பெண்கள் நெற்றியில் தினசரி குங்குமம் வைப்பது பாரம்பரியமாகவே ஐதிகமாகவே சொல்லப் படுகிறது. இது அழகு என்பதை தாண்டி, இரண்டு புருவங்களுக்கு நடுவில் அழுத்தி வைப்பதன் மூலம் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம் (ஆக்னேயம்) தூண்டப்படுகிறது. முகத்தில் இருக்கும் தசைகள் அனைத்தும் தூண்டப்படுகிறது.
இந்த இடத்தில் இருக்கும் சக்தியை வலுப்படுத்தவும் , இந்த சக்கரத்தின் இயல்பு எலக்ட்ரோ மேக்னடிக் எனப்படும் மின்காந்த அலைகளை புருவ மத்தி மற்றும் நெற்றிபொட்டில் வெளிப்படுத்த கூடியதால் இந்த சக்தி விரயமாவதை தடுக்க பொட்டு வைக்க வேண்டும் என்கிறார்கள். பொட்டு வைப்பதால் சக்தியை அளவாக வெளிப்படுத்தும் என்று சொல்லப் படுகிறது.
பாவாடை தாவணி:
பாவாடை தாவணி என்றால் பழம் என்று நினைக்கும் இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிலர் விசேஷ காலங்களுக்கு மட்டும் தான் பாவாடை தாவணி அணிகிறார்கள். இன்று உடலை இறுக்கும் ஆடைகளை அணியும் பதின்ம வயதினரை தான் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் பெண் பருவவயதை அடைந்ததும் பாவாடை தாவணி மட்டும் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு அறிவியல் ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் காரணம் உண்டு.
பருவ வயதுக்கு பிந்தைய காலங்களில் பெண்களின் இனப்பெருக்க மண்டலமானது காற்றோட்டமாக இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள் இருக்கும் போது அவர்களுக்கு இனப்பெருக்கமண்டலம் அதிக உஷ்ணத்தை சந்திக்கிறது. இது பெல்விக் இன்ஃப்ளமேட்டரி நோய் வருகிறது. பிற்காலத்தில் பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டிகள் வருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகவே ஆகிறது. இன்னும் தீவிரமாக இந்த ஆடைகள் அணிவதன் மூலம் குழந்தையின்மை வரையான பிரச்சனைகளை உண்டாக்கும் காரணங்களில் ஒன்றாகவும் இவை இருக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வாகவே பாவாடை, தாவணி, புடவைகள் உள்ளது என்று சொல்லலாம்.
ஆபரணங்களின் முக்கியத்துவம்
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்ன தான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி – தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு – எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே
3. மூக்குத்தி – மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் – கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் – கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை. அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப் படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..
கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக் கொணடு இருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப் படுத்துகிறது. இந்திய பெண்கள் கொலுசு போல் இல்லாமல் தண்டட்டி போல் உருட்டையாக அணிவார்கள்.
வளையல் அணிவது:
கடுமையான வேலையை செய்வதில் ஆண்கள் தான் அதிகமாக ஈடு பட்டிருந்தார்கள். பெண்கள் வீட்டில் இருக்கும் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிக்கட்டு முக்கியமான வர்ம புள்ளி என்று சொல்லலாம். வளையல் அணிவதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.
மற்றொன்று பெண்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள். அவர்களுக்கு உண்டாகும் கோபத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை வளையல் கொடுக்கிறது. வளையல் வடிவங்கள் கூட இதற்கு உதவுகிறது. வட்ட வடிவிலான வளையங்கள் சக்தியை வெளியே போக செல்லாமல் உடலுக்குள்ளே செலுத்துகிறது.
மெட்டி:
மெட்டி மிக முக்கியமானது. பெருவிரலுக்கு அடுத்த விரல் நமது கருப்பையோடு நேரடி தொடர்பு கொண்டவை. அதனால் தான் மாதவிடாய் வலியை கட்டுக்குள் வைக்க அந்த இடத்தில் சீரான அழுத்தம் கொடுக்க மெட்டி அணியப் படுகிறது. மாதவிடாய் அதிக வலி கட்டுக்குள் வரவே திருமணமான கையோடு மெட்டி அணிவிக்கப்படுகிறது. உஷ்ணம் தணிக்கவும் கருப்பை வேலையை சுறுசுறுப்பாக வைக்கவும் மெட்டி அணிவது அவசியமாக்கப் படுகிறது.
மோதிரம்:
விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மூக்குத்தி:
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தப் படுகிறது.
நெற்றிச் சுட்டி:
தலையிலிருந்து தவழ்ந்து, நெற்றியில் அழகாக குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப் படுத்துகிறது. நெற்றிச்சுட்டி அணியும் போது, தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறது.
தாலி, செயின், நெக்லஸ்:
கழுத்தில் செயின் அணியும் போது, உடலுக்கும், தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக, 'பாசிட்டிவ் எனர்ஜி' கிடைக்கிறது. மேலும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றது
வங்கி:
கையின் மேற்பகுதியில், தோள்ப் பட்டைக்கு கீழாக அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி, பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது. மார்பக புற்றுநோய் வருவது தவிர்க்கப் படுவதாக, ஆய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. லம்பாடி பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் வருவதில்லை. காரணம், மணிக்கட்டிலிருந்து முழங்கை மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால், மார்பு பகுதியின் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க உதவுகிறது.
ஒட்டியாணம்:
இடுப்புப் பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக துாண்டப்பட்டு, ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்கும். வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பை கட்டுப் படுத்துகிறது.
தோடு:
காதில் அணியும் ஆபரணம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அணிவதுண்டு. காது குத்தும் வழக்கம் நம் சமூகத்தில், ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப் படுகிறது. காதில் துவாரம் இட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்தத் தான். கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப் பட்டுள்ளதால், கூர்மையான கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.