VERSACE
வெர்சேஸ்
இத்தாலிய ஃபேஷன் பிராண்டான வெர்சேஸ், ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமமாக நவீன வடிவமைப்புகளைத் தயாரிக்கிறது. இது சமீபத்திய பேஷன் விரும்பிகள், மற்றும் சிறந்த தரம் மிகுந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக இருப்பவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தப் பிராண்ட் தனனுடைய போட்டியாளர்களுக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக் கொடுக்காமல், பல்வேறு ஃபேஷன் உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பாலான பேஷன் வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் வெர்சேஸ்ஸை, ஒரு பருவகால ஆடை பிராண்ட்டாகப் பரிந்துரைக்கின்றனர். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடை மற்றும் மற்ற பிற ஃபேஷன் பொருட்களை வழங்கும் ஒரு சிறந்த ஃபேஷன் பிராண்ட் ஆகும். இன்று, ஆடம்பர ஆடை வடிவமைப்பில் புகழின் உச்சத்தில் இருக்கும் இது, தற்பொழுது உபகரணங்கள், மேக்கப் பொருட்கள், மற்றும் புதிய தளபாடங்கள் (பர்னிச்சர்கள்) போன்றவற்றையும் தயாரித்து வருகின்றது.
Read more at: https://tamil.goodreturns.in/news/2016/06/26/top-10-most-expensive-clothing-brands/articlecontent-pf21676-005619.html