இலண்டன் பாலம்
இலண்டன் பாலம் (London Bridge) என்பது தேம்சு நதியின் (River Thames) மீது கட்டப்பட்டுள்ள பாலமாகும். இது இலண்டன் மாநகரையும் சவுத்வார்க்கையும் இணைக்கிறது.
இலண்டன் பாலம் என்ற பெயரில் பல பாலங்கள் இருந்துள்ளன. உரோமானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் ஒரு பாலம் இருந்தது. அதை அடுத்து இடைக்காலத்தில் ஒரு பாலம் இருந்தது. இப்பாலத்தின் தெற்குவாயில் கதவுக் கம்பிகளில் இராசத்துரோகிகள் மற்றும் கொடுங்குற்றவாளிகளின் தாரில் முக்கப்பட்ட தலைகள் சொருகப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக முதலில் காட்சிப்படுத்தப்பட்ட தலை வில்லியம் வேலசினுடையதாகும். 1831 ஆம் ஆண்டு இப்பாலம் இடிக்கப்பட்டு வேறொன்று கட்டப்பட்டது. 1968 ஆம் ஆண்டு இதுவும் விற்கப்பட்ட பிறகு தற்போதைய புதிய பாலம் கட்டப்பட்டது..