பழமையான கஜுராஹோ கோவில்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
பழமையான கஜுராஹோ கோவில்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
கஜுராஹோ கோவில் | மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது கஜுராஹோ கோவில்கள். வெளிநாட்டினரும் வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்றது. பொதுப்படையான ஒரு தவறான கருத்து என்னவென்றால், கஜுராஹோவில் உள்ள சிற்பவேலை பாலியலை இந்தச் சிற்பங்கள் குறிப்பதாக எண்ணப்படுகிறது..
உலக அளவில் பல்வேறு விதமான பழமை வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மிக சிலவற்றை மட்டுமே இன்று பராமரித்து வருகிறோம். இந்தியாவில் இது போன்ற பழமையான கோவில்கள், நகரங்கள், கட்டிடங்கள் அதிகம் உள்ளன. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதல் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் வரை பல பாரம்பரிய தலங்கள் இந்தியாவின் பிரபலமான இடமாக உள்ளது. இந்த நினைவுச் சின்னங்கள் இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சான்றாக விளங்குகிறது. அந்த வகையில் இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மற்றொரு பழமையான நினைவுச்சின்னம் தான் கஜுராஹோ கோவில்கள். பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கஜுராஹோ கோவில்களை சுற்றி பார்க்க ஒவ்வொரு வருடமும் படை எடுத்து வருகின்றனர்.
இவற்றுள் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது கஜுராஹோ கோவில்கள். வெளிநாட்டினரும் வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்றது. கஜுராஹோ கோவில்கள், கடவுள் சிலைகள் அருகிலும் கோவிலுக்கு உள்ளேயும் பாலியல் அல்லது சிற்றின்ப கலைகளைக் கொண்டிருக்கவில்லை; என்றாலும் சில வெளிப்புற சிற்பங்கள் சிற்றின்ப கலைகளைக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் இரண்டு கட்ட சுவர்களை உடைய சில கோவில்களின் உள் சுவற்றின் வெளிப்புறங்களில் சிறு சிற்றின்ப சிற்பவேலைப்பாடுகள் இருக்கின்றன. இந்தச் சிற்றின்ப சிற்பங்களுக்குப் பல பொருள் விளக்கங்கள் இருக்கின்றன. கடவுளைப் பார்ப்பதற்கு ஒருவர் தன்னுடைய பாலியல் விருப்பங்களைக் கோவிலுக்கு வெளியே விட்டு வரவேண்டும் என உருவப்படுத்திக் காட்டுகிறது. கோவில்களில் உள்ள கடவுள்களைப் போன்றே தெய்வத்தன்மையும், பாலியல் விருப்பங்கள் மற்றும் உடலியல் சார்ந்த இதர குணாதிசயங்களால் பாதிக்கப்படாத ஆத்மாவைப் போன்றே சுத்தமாக இருப்பதாக அவை காட்டுகின்றன.
கஜுராஹோ கோவில்கள் : மத்தியப் பிரதேசத்தில், ஜான்சி நகரின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 175 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன. அதே போன்று மஹோபாவிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கஜுராஹோ கோயிலின் கட்டமைப்புகள் கென் ஆற்றின் கரையின் மணற்கல்லில் இருந்து செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கட்டமைப்பை உருவாக்க அதிக மூலதனமும் உழைப்பும் தேவைப்பட்டிருக்க வேண்டும் என்பதை இதன் பிரம்மாண்ட அமைப்பு நமக்கு உணர்த்துகிறது.
வெறும் 10 சதவீத சிற்பங்கள் மட்டுமே சிற்றின்ப வகையை சார்ந்தவையாக உள்ளன. மீதமிருப்பவை சிற்பங்கள் செய்யப்ட்ட நேரத்தில் இருந்த சாதாரண இந்தியர்களின் தினசரி வாழ்க்கையை மற்றும் இதர உயிரினங்களின் பல்வேறு செயல்பாடுகளைச் சித்தரிக்கின்றன. உதராணத்திகு, இந்த விவரிப்புகள் பெண்கள் அழகு படுத்திக்கொள்வது, இசையமைப்பாளர்கள், குயவர்கள், விவசாயிகள் மற்றும் இதர மக்களைக் காட்டுகின்றன. பொதுப்படையான ஒரு தவறான கருத்து என்னவென்றால், கஜுராஹோவில் உள்ள சிற்பவேலைகளுடனான பழைய கட்டடஅமைப்புகள் கோவில்களாக இருப்பதால், கடவுளர்களுக்கிடையிலான பாலியலை இந்தச் சிற்பங்கள் குறிப்பதாக எண்ணப்படுகிறது..
கஜுராஹோ கோவில்கள் ஆரம்பத்தில் சுமார் 85 கட்டிடங்களைக் கொண்ட ஒரு பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவற்றில் சுமார் 20 கட்டமைப்புகள் மட்டுமே தற்போது உள்ளன. இந்த கட்டமைப்புகள் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிதறிக்கிடக்கின்றன. இந்த முக்கிய நினைவுச் சின்னங்கள் இன்றைய இந்தியாவின் தொலைதூரப் பகுதியில் உள்ள பழமையான வரலாறுகளை கொண்டுள்ளது. இந்த நகரம் பேரீச்சம்பழ மரங்களால் சூழப்பட்டிருந்ததால் 'கஜுராஹோ' என்று அழைக்கப்படுகிறது. கஜூர் என்றால் இந்தியில் பேரீச்சம்பழம் என்று பொருள். இதனால் தான் இப்பெயர் பெற்றது.