Sneha Birthday - புன்னகை அரசி சினேகா பிறந்தநாள்.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: Sneha Birthday (சினேகா பிறந்தநாள்) புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்படும் சினேகாவின் 42ஆவது பிறந்தநாள் இன்று.
நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார்..
முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.
புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.
திருமணம்: ஒருகட்டத்தில் சினேகாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அப்போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.மேலும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் ஒத்துக்கொண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
பிறந்தநாள்: இந்நிலையில் சினேகா இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சினேகாவுக்கு மொத்தமாக 60 கோடி ரூபாயிலிருந்து 75 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பிரசன்னாவும் சம்பாதிப்பதால் இந்த சொத்து மதிப்பு கூட இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அதேபோல் சினிமாவில் சம்பாதித்ததை பல தொழில்களில் சினேகா முதலீடு செய்திருப்பதால் வருமானம் சிறப்பாகவே அவருக்கு வந்துகொண்டிருக்கிறதாம்.