Share

விண்ணுக்கும் மண்ணுக்கும் மழைத்துளி பாலம் போடுது


விண்ணுக்கும் மண்ணுக்கும் மழைத்துளி பாலம் போடுது. 

மழைத்துதுளி நிலத்தில் மண்ணின் கழுத்தில் தாலியாகுது.

இடியும், மின்னலும் பட்டாசு.மேளமாய் 
குமுறித்தான் கொண்டாடுது.

ஒரு துளி பல  துளிகளாய் சேர்ந்து 
ஆறாக பாயுது..

அடங்காத ஆசை வெள்ளமாய் மாறி ஊர் எல்லையை தாண்டுது.

மானுடம் மரத்தையும் வெட்டி சாய்த்து தான் ஆடுது.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் வந்த காதலிலே.
மழை துளி மானிடா உன்  கதை மாறுது... கண்ணீரது .

ஐம்பூதங்கள் தானே என்னையும் உன்னையும் சேர்த்து இந்த உலகத்த ஆளுது.

நம் எதிர்காலம் கனவுகள் கொண்ட உள்ளங்களே உலகம் ஒரு வாடகை வீடு. 
சொந்தமா வீடு இருந்தாலும் வாடைக்காலம் முடியும் வரை உலகம் எனும் வீடு.

பொறுப்புடன் வாழவிட்டால் பாதிப்பு உறுதி.