Share

உலகில் 7,500-க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள்


கி.மு. 6,500-ம் ஆண்டிலேயே ஆப்பிள் பழம் இருந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் 7,500-க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 2,500 ஆப்பிள் வகைகள் உள்ளன.

சீனா, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் ஆப்பிள் பழங்கள் அதிகமாக விளைகின்றன.

உலகில் ஆண்டொன்றுக்கு 66 மில்லியன் டன் ஆப்பிள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆப்பிள் மரங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்களைத் தரும்.

ஆப்பிள் மரங்கள் 100 ஆண்டுகள் வரை இருக்கும்.

உடலுக்கு ஆரோக்கியமானதாக ஆப்பிள் கருதப்பட்டாலும், அதன் விதைகள் விஷத்தன்மை கொண்டதாக உள்ளன.

ஆப்பிள்களில் 25 சதவீதம் காற்று இருப்பதால், அது தண்ணீரில் மிதக்கிறது.

ஆப்பிள்களில் கொழுப்புசத்து, சோடியம் ஆகியவை அறவே இல்லை.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஆப்பிள்கள் அதிகமாக விளைகின்றன.