Share

Ray Stevenson rrr movie


Ray Stevenson 

பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம்  

 

1796 – 1948 வரை இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம் கீழைத்தேய நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக விளங்கிய இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளப் பல்வேறு காரணிகள் ஏதுவாக அமைந்திருந்தன.

 


இந்தியா உட்பட கீழைத்தேய நாடுகளில் ஏற்கனவே தன் செல்வாக்கிற்கு உட்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவை முற்று முழுதாகத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் திருக்கோணமலைத் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. புயல் அபாயங்களிலிருந்து தனது கடற்படையைப் பாதுகாத்துக் கொள்ளவும், இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா எண்ணியது
பிரித்தானிய வர்த்தக்கத்தில் காணப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை (தலையிடாக் கொள்கை அல்லது தாராளவாதக் கொள்கை என அழைக்கப்படும்) காரணமாக இலங்கையில் மூலப் பொருட்களைப் பெற்று, முடிவுப் பொருட்களை சந்தைப்படுத்தக் களமமைக்க எண்ணிமை.
இலங்கையில் முதன்மை பெற்று விளங்கிய கறுவா வர்த்தகத்தைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணிமை.
1789ம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ்சுடன் பிரித்தானியா மேற்கொண்ட போர்களின் போது பயன்படுத்தப்பட்ட போர்வீரர்களுக்கு போர் முடிவின் பின்னர் தொழில் வாய்ப்புக்களை வழங்கல். (பிரித்தானியரால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட துறைகளில் இந்தப் போர்வீரர்களின் பங்களிப்பே அதிகமாகக் காணப்பட்டிருந்தது..