Adolf Hitler அடால்ப் ஹிட்லர்
Adolf Hitler அடால்ப் ஹிட்லர்
உலக வரலாற்றில் ஒரு முறை மீண்டும் புரட்டினால் அதில் நாம் நிச்சயம் Adolf hitler பெயர் இடம்பெற்றிருக்கும். அவருடைய வாழ்க்கை என்பது பலவகையான மர்மங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இன்னும் சிலர் அடால்ப் ஹிட்லர் 1945 இறக்கவேயில்லை என்றும் அர்ஜென்டினா நாட்டில் 95 வயது வரை வாழ்ந்து பின்னரே இறந்தார் என்றும் கூறுகிறார்கள். பல மர்மங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கையில் சில வரலாற்று உண்மைகளை நாம் இந்த பதிவில் காணலாம்.தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஜெர்மனி நாட்டின் நன்மைக்காகவே வாழ்ந்த அடால்ப் ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் கிடையாது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?. நிச்சயம் அவர் ஜெர்மானியர் கிடையாது.
அவர் ஏப்ரல் 1889 ஆம் ஆண்டு ஜெர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியாவில் பிறந்தார். தன்னுடைய பள்ளி ஆசிரியரான ஜெர்மனியை சேர்ந்த லியோபோல்ட் போஸ்ட்ச் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அடால்ப் ஹிட்லருக்கு ஜெர்மனி மீது தீராத காதல் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி நாட்டின் ராணுவத்தில் 1914 ஆம் ஆண்டு சேர்ந்து பின்னர் 1925 ஆம் ஆண்டு தன்னுடைய ஆஸ்திரியா நாட்டின் குடியுரிமையை துறந்து முழு ஜெர்மனி நாட்டவராக அவர் மாறினார்.
இறக்க குணம் சிறிதும் இல்லாமல் கொடூரமான சிந்தனை கொண்ட ஹிட்லர் ஒரு சிறந்த ஓவியர் ஆவார். அவருடைய வாழ்க்கையின் லட்சியமே சிறந்த ஓவியனாக மாறுவதே ஆகும். ஆனால் முதலாம் உலகப்போர் அவரை மாற்றிவிட்டது.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இருக்கும் கலை கல்லூரியில் ஓவிய படிப்பை படிக்க மிகவும் ஆசையாக இருந்த அவர் தொடர்ந்து இரு முறை தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். காரணம் அவருக்கு கட்டிடங்கள் வரைவதில் சிறந்த திறன் இருந்தாலும் மனிதர்களை வரைவதில் அவ்வளவு திறன் இல்லை என்று கூறி அவரை சேர்க்கவில்லை.
ஆனாலும் அவருடைய ஓவியங்கள் மீதான ஆர்வம் அவரை விடவில்லை. அவர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக மாறியதும் அருங்காட்சியகத்தில் இருந்த பல மாடர்ன் ஓவியங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு அவரின் பல ஓவியங்கள் அதில் வைக்கப்பட்டன.
முதலாம் உலகப்போரில் ராணுவ செய்தி அனுப்பும் வேலை செய்துவந்த அவருக்கு ரசாயன குண்டுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. இதன் பிறகே அவருக்கு மூர்க்கத்தனம் அதிகரித்ததாக வரலாறு கூறுகிறது.
அந்த ரசாயன குண்டு பாதிப்பு அவருக்கு சிறிது காலம் கண்களை பாதிக்கவைத்து செயல் இழக்கவைத்திருந்தது. அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தபோது அவர் பார்த்தது ஜெர்மன் ராணுவத்தின் தோல்வியையே.
தன்னுடைய நாசி படையை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க 1923 ஆம் ஆண்டு அவர் செய்த முனிச் பயணம் தோல்வி அடைந்ததால் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவரை 1 வருடம் தேச துரோகம் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தது அப்போதைய ஜெர்மன் அரசு.
அங்கு சிறையில் அவர் எழுதிய Mein Kampf புத்தகம் மிகவும் பிரபலமடைந்தது. பின்னாளில் அதுவே அவரின் பெயரை ஜெர்மனி முழுவதும் பரவ முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
1932 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர் வோன் ஹிண்டன்பெர்க் அவர்களிடம் தோற்றுப்போனார். ஆனாலும் ஜெர்மனி முழுவதும் 37% வாக்குகள் பெற்று நாஜி கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் 1933 ஆம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் ஹிண்டன்பெர்க் மறைவிற்கு பிறகு அவரே ஜனாதிபதி என்று தன்னை அறிவித்துக்கொண்டார்.
தன்னால் தொடங்கப்பட்ட வதை முகாம்கள் எதையும் அவர் நேரில் சென்று பார்த்ததே கிடையாது. லட்சக்கணக்கான யூதர்கள் கொன்ற அவர் ஒருமுறை கூட சென்று பார்க்காதது உண்மையில் ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது.
விலங்குகளில் பாதுகாவலர்
லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்த அவர் விலங்குகள் வதைபடுவதை விரும்பாதவர். மேலும் அதன் பாதுகாப்பிற்காக பல வேலைகளும் செய்துள்ளார் ஹிட்லர் அமைதிக்கான நோபிள் பரிசு பெரும் போட்டியாளர்களின் ஒருவராக இருந்தார். பின் அவரே அந்த போட்டியில் இருந்து விலகி இனி ஜெர்மனியை சேர்ந்த எவரும் நோபிள் பரிசு பெறக்கூடாது என்று உத்தரவிட்டார். அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்தில் 1938 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த மனிதர் என்று அவரின் அட்டைப்படம் வெளியிடப்பட்டது.